அருமை உலக அழகியாக வாய்ப்பிருந்தும் இந்திய இராணுவத்தில் சேர்ந்த வீரமங்கை.!



indian-militry-service-joined---modeling-girl-harima

டெல்லி செயின் ஸ்டீபன் கல்லூரியின் மாணவி கரீமா யாதவ். இவர் கல்லூரியில் சேரும் பொழுது இந்திய ராணுவத்தின் பணிபுரிய வேண்டும் என்று தனியா வேட்கை கொண்டிருந்தார். இந்நிலையில் படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வுக்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் பொழுதுபோக்கிற்காக மாடலிங் செய்து வந்த அவர் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பேஜ்அன்ட் என் அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அடுத்த பேஜ்அன்ட் போட்டி சர்வதேச அளவில் இத்தாலியில் நடக்கிறது. அதிலும் அவர் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

இதற்கிடையில் ஐஏஎஸ் தேர்வை எழுதி இருந்த அவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும் அதற்கு அடுத்த நிலையில் இந்திய ராணுவத்தில் சேருவதற்கான சிடிஎஸ் எனப்படும் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருந்தால் ராணுவ பயிற்சி முகாமில் சேருவதற்கான அழைப்பும் வந்தது.

இரண்டு வாய்ப்புகளும் ஒரே நேரத்தில் அமைந்ததால் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். இந்நிலையில் சிறுவயதிலிருந்தே தனக்கு விருப்பமான இந்திய ராணுவத்தில் சேர முடிவெடுத்து தற்போது சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

View this post on Instagram

proud moment ⚔️🇮🇳❤️ #indianairforce #indianarmy

A post shared by SSBCrack (@ssbcrackofficial) on

உலக அழகியாக வாய்ப்பிருந்தும் இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவரது செயலை பாராட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.