96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு.! உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் மகிழ்ச்சி.!
உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் இரண்டு நாட்டிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இந்தநிலையில், போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், யுத்த பூமியாக இருக்கும் உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் தங்களது உடமைகளை இழந்தாலும் பரவாயில்லை உயிர் பிழைத்தால் போதும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில், உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து உக்ரைனில் இருந்து இந்தியா வருபவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளையும் உடன் அழைத்து வருகின்றனர். இதற்கு பீட்டா அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.