சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்! சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் மீது தீவிர கண்காணிப்பு

இன்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சொல் கொரோனா வைரஸ். சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் இருந்து பரவி வரும் இந்த கொடிய வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவ கூடுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
படிப்பு, தொழில், வர்த்தகம் என பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் பலர் சீனாவில் வசித்து வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து உறவினர்கள் மிகுந்த கழகத்தில் உள்ளனர். இதனால் சீனாவில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு குறித்து இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசானது சீனாவில் வாழும் இந்தியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#CoronavirusOutbreak Update
— Raveesh Kumar (@MEAIndia) January 26, 2020
We are on the job!
EAM @DrSJaishankar is closely monitoring the stituation. @EOIBeijing is in close touch with Indian citizens, including university students, in Wuhan & elsewhere in Hubei Province in China. (1/5) https://t.co/9fGhUJihqq