தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதட்டம்! காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து! அமித்ஷாவின் அதிரடி!
ஜம்மு காஷ்மீர் நிகழும் பதற்றம் தொடர்பாக ஸ்ரீநகரில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 90 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை குறிவைத்து நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா ,மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்றுகாலை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307-ஐ நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து ரத்தை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார். இதையடுத்து, ஜம்மு-ஷ்மிர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் புத்திரதேசங்களை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.