மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜியோவின் அதிரடி ஆஃபர்.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!
இந்தியாவின் தலைசிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக தற்போது ஜியோ இருந்து வருகிறது. சந்தையில் ஜியோவின் வருகையால் மக்கள் அனைவரும் குறைந்த விலையில் அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளையும் பெற்று வருகின்றனர்.
ஜியோ சிம்மினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஜியோ கைப்பேசியும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல ஏழை எளிய மக்களும் மொபைல் போனினை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
தற்போது மீண்டும் ஒரு அதிரடி ஆஃபராக 1500 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனினை ஜியோ நிறுவனம் இலவசமாக விற்பனை செய்து வருகிறது.
இந்த சலுகையினை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ஒரு வருட ஜியோ சிம்மிற்கான ரீசார்ஜ் தொகை ரூபாய் 1624 மட்டும் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் இலவச மொபைல் போனும், ஒரு வருடம் அளவில்லா போன் கால்களையும் அனுபவிக்கலாம்.