மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 60 வயது மூதாட்டி பரிதாப பலி; 150 பேருக்கு உடல்நலக்குறைவு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஹொஸ்கோட் பகுதியை சேர்ந்த பெண்மணி சித்தகங்கம்மா (வயது 60). இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஹனுமான் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு பூஜைகள் நிறைவு பெற்றதும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை பெண்மணியும் சாப்பிட்ட நிலையில், அடுத்தடுத்து பலரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளனர்.
வயிற்றுப்போக்கு, தலைவலி, மயக்கம் என பல்வேறு உடல்நலக்குறைவுடன் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதியதால், சுகாதாரத்துறையினர் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்தனர்.
காவல் துறையினரும் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். உணவு மாதிரி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்தகங்கம்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மொத்தமாக 150 பேர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.