குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. பீர் விலை உயருகிறது..!



karnataka-govt-plan-to-increase-price-beer

எரிபொருள் விலை மற்றும் பீர் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ள காரணத்தால், பீரின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கர்நாடக மாநிலத்தின் 2022 - 2023 பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி மாதம் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையால் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மதுபான வரி உயர்த்துவது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை. இதனால் மதுபானத்தின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இதனை அம்மாநில கலால்துறை அமைச்சர் கோபாலய்யாவும் உறுதி செய்தார். 

சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், மதுவை விற்பனையகங்களுக்கு கொண்டு செல்ல அதிக செலவு ஏற்பட்டுள்ளது. இதனால் பீர் விலையை முதற்கட்டமாக உயர்த்த பீர் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். பீரின் தயாரிப்புக்கு உபயோகப்படும் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள காரணத்தால், பீரின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

karnataka

இதுகுறித்து பீர் தயாரிப்பு நிறுவனங்கள் கலால் துறைக்கு கோரிக்கை மனுவும் அளித்துள்ளன. இதனால் பீரின் விலையை உயர்த்த கலால்துறை ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு பீரின் விலை உயர்த்த முடிவெடுக்கும் பட்சத்தில் பாட்டீலுக்கு ரூ.5 முதல் 10 வரை உயரலாம் என்றும், இது வரும் 15 ஆம் தேதி முதல் அமலாகலாம் எனவும் தெரியவருகிறது. 

"மதுப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும், எதிர்காலத்தை சீரழிக்கும், உயிரை காவு வாங்கும்."