குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் ஒரே மேடையில் போராட்டம்!



kerala cm and Opposition protest in same place


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மற்றும் டெல்லி, அலிகார் உள்ளிட்ட நகரங்களிலும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. அதேபோல அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போதும் தடியடி நடத்தப்பட்டது.   

இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் ஒரே மேடையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நடக்கும் போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிக்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒரே மேடையில் இருந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.