96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சிகிச்சைக்கு வந்த வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை... நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி சிகிச்சை மையத்திலிருந்து வெளியே சென்றுள்ளார்.
வெளியே சென்ற அந்த இளம் பெண் மீண்டும் சிகிச்சை மையத்திற்கு வராததால் அதிர்ச்சியான அப்பெண்ணின் சகோதரி கேரளா போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரியின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவரது உடல் கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைகள் அந்தப் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி யார் என தேடிவந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உதயன் மற்றும் உமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு திருவனந்தபுரம் முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இன்று இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.