கொரோனோவை கட்டுப்படுத்த புதிய ஐடியா! கேரளா போட்ட மாஸ்டர் பிளான்! வைரலாகும் வீடியோ!



kerala-introduced-robo-for-control-corono

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இத்தகைய கொடிய வைரஸால் உலகம் முழுவதும் 160000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதுவரை 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இந்தியாவில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ்  பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. மேலும் பல தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

KERALA

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் கேரளாவில், அதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு விமான நிலையங்கள், மால் போன்ற பொது இடங்களில் ரோபோக்களை களமிறக்கியுள்ளது. அந்த ரோபோக்கள் மூலம் பொது இடங்களுக்கு வரும் மக்கள் கைகழுவ  இலவசமாக சானிடைசர்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளித்து, அறிவுரைகளையும் கூறி வருகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.