தங்கக்கடத்தலில் ஈடுபட்ட விமான பணிப்பெண்ணிடம் இப்படித்தான் தங்கத்தை கைப்பற்றினார்களா? வைரலாகும் வீடியோ.!



Kerala kannur Air Hostess Gold Smuggling Case 

 

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில், சமீபத்தில் விமான பணிப்பெண் சுரபி கட்டூன் என்பவரிடம் இருந்து 970 கிராம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான பணிப்பெண் தனது மலக்குடலில் வைத்து அதனை கடத்தி இருந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக 26 வயதாகும் பெண்மணி கைது செய்யப்பட்டு, விசாரணையை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல அவருடன் தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்பில் இருந்த நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: கள்ளக்காதலியுடன் ஜல்சா... கணவரை கையும் களவுமாக பிடித்து, அடித்து நொறுக்கிய முன்னாள் அழகி..!

போலியான தகவலுடன் வைரலாகும் வீடியோ

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்பாக பெண்ணிடம் இருந்து தங்கம் மருத்துவ குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது என்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வந்தது. இந்த வீடியோ உண்மையானது இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய வீடியோ கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை தவறான நோக்கத்துடன் பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் தவறான எண்ணத்துடன் பகிரப்பட்டுள்ள வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

சர்ச்சை வீடியோ போலியானது என்பதன் விளக்கம்

இதையும் படிங்க: 3 மணிநேரத்தில் 10 ஆயிரம் மின்னல்கள்; வெளுத்து வாங்கிய கனமழையின் நடுவே வானை அலங்கரித்த சம்பவம்.!