3 மணிநேரத்தில் 10 ஆயிரம் மின்னல்கள்; வெளுத்து வாங்கிய கனமழையின் நடுவே வானை அலங்கரித்த சம்பவம்.! 



vizag-rain-thunderstorm

 

கடந்த சில வாரங்களாக ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெப்ப அலை பதிவாகி வந்தது. கோடை காரணமாக ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் மக்களை கடும் இன்னலுக்கு உள்ளாகியது.

திடீர் கனமழை

இந்நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் பெய்த கனமழை காரணமாக மக்கள் குளுகுளு சூழ்நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். அதே வேளையில், நேற்று 3 மணிநேர இடைவெளியில் மட்டும் விசாகப்பட்டினத்தில் மின்னல் தாக்குதல் அதிகம் இருந்தது. 

இதையும் படிங்க: வெப்ப அலையால் உயிருக்கு போராடிய உயிர்கள்; நீர்கொடுத்து உதவிய மக்கள்.! நெகிழவைக்கும் காணொளி.!

10 ஆயிரம் மின்னல்கள்

மழை பெய்த 3 மணிநேரத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மின்னல் விசாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டதாக தகவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: 7ம் கட்ட வாக்குபதிவில் நடந்த பரபரப்பு சம்பவம்; குட்டையில் வீசப்பட்ட ஈவிஎம் மெஷின்.!