அட்ராசக்க.. ரூ.500-க்கு LPG சிலிண்டர்.. அதிரடி காட்டிய மாநில அரசு.! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!!



LPG Cylinder Price Rajasthan State Scheme

மாநில அரசின் புதிய திட்டத்தால் ரூ.500 விலையில் சிலிண்டர் கிடைக்கும்.

இந்தியா எதிர்கொண்டுள்ள பணவீக்க பிரச்சனை காரணமாக மக்கள் கவலை அடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு எல்பிஜி சிலிண்டருக்கு அரசு மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

அதன்படி எல்பிஜி கேஸ் சிலிண்டர் திட்டத்தின் கீழ் மானியம் வழங்க ரூ.750 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் 2023-24 மாநில பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

LPG Cylinder

இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக அதிக விலையில் சிலிண்டர்களை வாங்க முடியாதவர்கள் குறைந்த விலையில் சிலிண்டர்கள் வாங்க முடியும். அந்த வகையில் பிபிஎல் குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும்.

12 லட்சம் சிலிண்டர்களுக்கு மானியம் கொடுக்கப்படுவதால் ஏறத்தாழ 73 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் மாநிலத்தில் இது அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.