மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான பெண்ணை கள்ளக்காதலியாக்கி 15 நாட்கள் பலாத்கார சித்ரவதை; பரபரப்பு புகார்.!
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம், டாப்ரா பகுதியில் 27 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்த நிலையில், தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது.
திருமணமான பெண்ணை வயப்படுத்திய இளைஞர்
இதனிடையே, இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சதேந்திரா என்ற நபருடன், 27 வயது பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், பின்னாளில் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஏசி பெட்டியில் அத்துமீறி நுழைந்து இருவர் கும்பலால் பெண் பலாத்காரம்.!
ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச்சென்று பலாத்காரம்
பெண்ணிடம் திருமண ஆசை காண்பித்த சதேந்திரா, அவரை தன்னுடன் அழைத்துச்சென்று 15 நாட்களாக வீடு ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி அங்கிருந்து தப்பி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சதேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காட்டுக்குள் சென்ற 62 வயது முதியவரை உணவாக சாப்பிட்ட புலி.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!