மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்டுக்குள் சென்ற 62 வயது முதியவரை உணவாக சாப்பிட்ட புலி.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், ரைஸன் மாவட்டம், ஓபேதுல்லாகன்ச் பகுதியில் வசித்து வரும் 62 வயதுடைய முதியவர், சம்பவத்தன்று தனது வீட்டருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக புலி ஒன்று வருகை தந்துள்ளது. புலியிடம் சிக்கிய முதியவர் புலிக்கு இரையாகி இருக்கிறார்.
வனத்துறை அறிவுறுத்தல்
அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் புலி முதியவரை அடித்துக்கொள்ளும் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த விசயம் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனப்பகுதிக்குள் மக்கள் செல்வதை தவிர்க்குமாறும் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திருமண கொண்டாட்டத்தில் காருக்குள் இருந்த 3 வயது மகளை மறந்த பெற்றோர்; மூச்சுத்திணறி பரிதாப பலி.!
பீடி இலைக்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட முதியவர்
இந்த சம்பவத்தில் உயிரிழந்த முதியவர் மணிராம் ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காட்டுக்குள் உள்ளூர் மக்களின் எச்சரிக்கையையும் மீறி பீடி இலைகளை சேகரிக்க சென்றதபோது புலியிடம் சிக்கி உயிரிழந்ததது உறுதி செய்யப்பட்டுள்ளது. புலி சாப்பிட்டபோது போக எஞ்சிய உடல் மட்டுமே அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமண ஊர்வலத்தில் கரிக்கட்டையான மணமகன்; ஆவலுடன் காத்திருந்த மணப்பெண்ணுக்கு தீயாய் சென்ற துக்க செய்தி.!