மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏசி பெட்டியில் அத்துமீறி நுழைந்து இருவர் கும்பலால் பெண் பலாத்காரம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் இருந்து, உத்திரபிரதேசம் மாநிலத்தின் அலகாபாத் நோக்கி துள்சி எக்ஸ்பிரஸ் (Tulsi Express) விரைவு இரயில் சேவை செயல்பாட்டில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 10 ம் தேதி மும்பையில் இருந்து உத்திரபிரதேசம் நோக்கி இளம்பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார்.
இருவர் கும்பல் அதிர்ச்சி செயல்
பெண்மணி ஏசி வகுப்பில் பயணம் செய்த நிலையில், இரயில் குவாலியர் இரயில் நிலையத்திற்கு முன்பு பயணிக்கும்போது 2 பேர் கும்பல் பெண்ணின் அறைக்குள் வந்துள்ளது. அங்கு இருவர் கும்பலால் பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். முதலில் பேசுவது போல வந்த கும்பலை, மயக்க மருந்து போன்ற திரவம் கொடுத்து மயக்கி பலாத்காரத்தை அரங்கேற்றி இருக்கிறது.
இதையும் படிங்க: "நான் உயிரியல் ரீதியாக பிறக்கல., கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பேச்சு.!
போபால் இருப்புப்பாதை அதிகாரிகள் விசாரணை
கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு பின் பெண்மணி எழுந்து குவாலியர் இரயில் நிலையத்தில் எழுந்து இரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் பெண்மணி போபால் இரயில் நிலையம் வந்ததும் அங்கு புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பெண்ணை பலாத்காரம் செய்த நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: #Breaking: உள்துறை அமைச்சகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகள் சோதனை.!