மீனவர்களுக்கு குட் நியூஸ்: கடற்படையால் கைதாகும் நபரின் குடும்பத்திற்கு, விடுதலையாகும் வரை நாளுக்கு ரூ.300 நிதிஉதவி; அமைச்சரவையில் முடிவு.!



Maharashtra Cabinet Approve if Fishermen Caught by Pak Army


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்படுவதை போல, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையால் எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்படும் சூழ்நிலை தொடருகிறது. 

இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் இலங்கை தமிழக மீனவர்களை கைது செய்வது முந்தைய காலங்களை போல அல்லாமல் குறைந்து இருந்தாலும், அவை தொடர்ந்து வருகிறது. ஆனால், குஜராத் மற்றும் மராட்டிய மீனவர்களின் நிலைமை வேறு என்பதால், அவர்கள் விடுதலையாக பல ஆண்டுகள் கூட ஆகலாம். 

maharashtra

இவ்வாறான சூழ்நிலையை கருத்தில் கொண்டு குஜராத் மாநில அரசு தனது மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மீனவர்கள் பிறநாட்டு கடற்படையால் கைது செய்யப்படும் பட்சத்தில், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.300 நாளொன்றுக்கு வீதம் அவர்கள் விடுதலையாகும் வரை வழங்குகிறது. 

இந்த திட்டத்தினை தனது மாநிலத்திற்கும் அறிமுகம் செய்துள்ள மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை, விரைவில் அதனை செயல்படுத்தவும் இருக்கிறது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால், அம்மாநில மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.