Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
இன்ஸ்டாவில் லைவ் போட முயற்சித்து இன்ஸ்டன்ட் விபத்து.. பெண் மீது வாகனம் மோதி பரிதாப பலி.!
சாலையில் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, முகமதுவாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஆயான் ஷேக், சைய்யத் ஷேக். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். கடந்த 6ம் தேதி காலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர்.
இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை பதிவிட பயணித்துள்ளனர். இருசக்கர வாகனத்தின் பின்னால் சையத் இருந்தவாறு வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த சமயத்தில், சாலையில் இருந்த பெண்ணின் மீது இவர்களின் வாகனம் மோதியுள்ளது.
இந்த விஷயத்தில் பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்த வணவாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்திய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.