திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒயின் வகை மதுவை சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி..!
மதுபான வகையில் ஒன்றாக இருக்கும் ஒயினை சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய மஹாராஷ்டிரா மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை, சூப்பர் மார்க்கெட் மற்றும் கடையில் ஒயின் விற்பனை செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் பழங்கள் சார்ந்த ஒயின் ஆலைக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக பேசிய ஆளும் கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஒயின் மதுபானம் இல்லை. ஒயின் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில், அதிக பலன்களை விவசாயிகள் பெறுவார்கள். விவசாயிகளின் வருமானம் இதனால் இரட்டிப்பாகும்.
சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்பனை செய்ய பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவர்கள் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. வழிபாட்டுத்தலம் மற்றும் கல்வி நிறுவனத்திற்கு அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி கிடையாது. மதுவிலக்கு உள்ள மாவட்டத்திலும் ஒயின் விற்பனைக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்தார்.
இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, "மகாராஷ்டிரா மாநில அரசு மதுபான விற்பனையை ஊக்குவிக்கிறது. மராட்டியதை மதுபான மாநிலமாக மாற்ற நாங்கள் அனுமதி செய்யமாட்டோம். மதுவுக்கு முன்னுரிமை கொடுத்து ஊக்குவிப்பது கண்டனத்திற்குரியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.