மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓமிக்ரான் பரவல் பரபரப்பு.. 2 நாள் ஊரடங்கால் வெறிசோடிய மும்பை..!
ஓமிக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பையில் இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் இருந்தே, இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் வகை வைரஸும் அங்கு பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த காவல் துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.
இதனையடுத்து, வாரத்தின் இறுதி நாட்களான சனிக்கிழமையான இன்றும், ஞாயிற்றுக்கிழமையான நாளையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நாட்களில் 144 தடை உத்தரவு மும்பை மாநகரில் அமலாகியுள்ள நிலையில், பொதுமக்கள் கூடுவதற்கும், நிகழ்ச்சிகள் நடத்தவும், ஊர்வலம் மற்றும் பேரணி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடியது.