மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவா நோக்கி RDX வெடிபொருட்களுடன் 2 பாக்., பயங்கரவாதிகள் பயணம்?; மும்பை காவல்துறைக்கு காத்திருந்த ட்விஸ்ட்.!
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட பாண்டே என்ற நபர், மும்பையில் இருந்து கோவா நோக்கி இரண்டு பயங்கரவாதிகள் சென்றுகொண்டு இருக்கிறார்கள்.
இருவரும் பாகிஸ்தானியர்கள் மற்றும் லாரி நிறைய RDX வெடிபொருளை நிரப்பிக்கொண்டு பயணம் செய்கிறார்கள் என தெரிவித்து அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் பணியில் இருக்கும் அதிகாரிகளை உஷார்படுத்திவிட்டு, அழைப்பை கொடுத்த பாண்டேவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை காவல்துறைக்கு இவ்வாறான அழைப்புகள் பெறப்படுவது புதிதில்லை என்றாலும், அதிகாரிகளை அலைக்கழிக்க ஒவ்வொரு காரணமாக கூறி நூதன முறையில் அவர்களை அவதிப்பட வைத்து வருகின்றனர்.