சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
#Video: மஹாராஷ்டிராவில் விண்கற்கள் பறந்து சென்றதால் பரபரப்பு.. விண்கல்லா? சீன செயற்கைகோள் ராக்கெட்டா? என ஆய்வு.!
மராட்டிய மாநிலத்தில் விண்கற்கள் பறந்து விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில், நேற்று இரவு 8 மணியளவில் வானில் மர்ம பொருளொன்று தீப்பற்றி எரிந்தவாறு பறந்து வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள் அதனை வீடியோ எடுத்து இருக்கின்றனர். மேலும், இது தொடர்பாக உள்ளூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வானில் ருந்து விழுந்த மர்ம பொருள் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.
Maharashtra | An "Ulkapat" (meteorite) was visible in the sky at around 8 pm. I saw it myself. Its direction was from north to east. It got split into four parts. No damage has been caused and there is nothing to fear: Pramod Hile, Tehsildar Yeola, Nashik (02.04) pic.twitter.com/nhpjyhJB2v
— ANI (@ANI) April 3, 2022
அப்போது, வானில் பறந்து சென்றவை அனைத்தும் விண்கற்கள் எனவும், அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விஷயத்திற்கு விளக்கம் அளித்துள்ள வானியல் ஆய்வாளர்கள், இது சீனா செலுத்திய செயற்கைகோள் ராக்கெட்டின் மறு உள்நுழைவு என்று தெரிவித்துள்ளனர்.