#Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
அச்சோ..பெண்ணுக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த பரிதாப நிலை.! பிளேபாய் ஆப் பரிதாபங்கள்.!
வேலையில்லா பட்டதாரி வாலிபர் ஒருவர் "பிளேபாய்" என்ற செயலியின் மூலமாக 17 லட்சம் ரூபாய் பணத்தை இறந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே, தத்தாவாடி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான கெமிஸ்ட்ரி பட்டதாரி. இவர் அவரது தந்தை வேலையில் ஒய்வு பெற்றவுடன் அவருடைய 17 லட்சம் ரூபாய் பணத்தை தனது வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து சிறிதுநாட்களிலேயே அவரது தந்தை இறந்த நிலையில், வாலிபர் சமூக ஊடக தளத்தில் "பிளேபாய்" என்ற ஆண் எஸ்கார்ட் விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அத்துடன் அதில் ஒரு மணி நேரத்திற்கு 3,000 ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்டிருந்ததனை கண்டு அதில் சேர விருப்பப்பட்டு உள்ளார். மேலும், அந்த நபருக்கு இந்த ஊடகம் மூலமாக பலரிடம் இருந்து தொடர்புகள் கிடைத்துள்ளன. இதனால் அந்த ஊடக நிர்வாகிகள் போலீஸ் சரிபார்ப்பு மற்றும் பிக்கப், டிராப், அறை வாடகை, உரிமக்கட்டணம் என பலவற்றை காரணம் கூறி 17 லட்சம் ரூபாயை தங்களின் அக்கவுண்டுக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய வாலிபர் இறந்த தந்தையின் ஆயுள் சேமிப்பு மற்றும் அவரது வைப்புத்தொகையை அவர்கள் கூறிய அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளார். இது மட்டுமின்றி தனது குடும்பத்தினர் கேட்டபோது அதனை நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து செயலியின் அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாத காரணத்தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். வாலிபர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.