#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
14 வயது சிறுமி ஆசிட் ஊற்றிக் கொடூர கொலை; தந்தை-மகனாக படுபயங்கரம்.. நெஞ்சை நடுங்கவைக்கும் பேரதிர்ச்சி.!
குடும்பத் தகராறில் 14 வயது சிறுமி ஆசிட் ஊற்றி கொடூரமாக கொல்லப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டம், பத்ரா பகுதியில் 14 வயதுடைய யசோதா என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அதே கிராமத்தை சேர்ந்த பிரேம் பால், அவரின் மகன் யோகேந்திரா ஆகியோரால் காட்டுப்பகுதிக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சரக்கு வாங்க ரூ.100 கொடுக்காததால் ஆத்திரம்; நண்பன் அடித்தே கொலை.!
காட்டுப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட எட்டாம் வகுப்பு பயிலும் சிறுமியை, இருவரும் சேர்ந்து முகம் மற்றும் உடலில் ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். பின் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். உடல் முழுவதும் தீப்பற்றிய உணர்வுடன் சிறுமி அலறித்துடித்தார்.
சிறுமி பலி
அவரை மீட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, உடனடியாக மீரட் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில் இரண்டு குடும்பங்கள் இடையே நிலவிய முன்விரோதத்தில் சிறுமி மீது ஆசிட் வீசப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 16 ஆண்டுகளாக முடியை சாப்பிட்ட 21 வயது இளம்பெண்; அறுவை சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்த பெண்.!