மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளிர் காவல் நிலையத்தில் சரக்கு பார்டி, கொண்டாட்டம்.. சப் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேருக்கு ஆப்பு.!
காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மதுபானம் அருந்தி குத்தாட்டம் போட்ட நிலையில், மாநகர காவல் ஆணையர் 5 பேரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் வைத்து, காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மதுபானம் அருந்தி குத்தாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக மாநகர காவல் ஆணையர் சசிகுமாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் உதவி ஆணையர்களான ஹரிராம் சங்கர் மற்றும் ரஞ்சித் பண்டாரு விசாரணை மேற்கொண்டு அறிக்கையை நேற்று தாக்கல் செய்தனர். விசாரணையில், மகளிர் காவல் நிலையத்தில் 2 காவல் உதவி ஆய்வாளர்கள், 3 காவல் அதிகாரிகள் மதுபானம் அருந்தி நடனம் ஆடியது உறுதி செய்யப்பட்டது. மேலும், காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராவும் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர் சசிகுமார், மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவல் அதிகாரிகள் என 5 பேரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். மற்றொரு போக்ஸோ வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரோசம்மா என்பவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.