கண்ணூர் ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய திருப்பம்... வாக்குமூலத்தால் அதிர்ச்சி !



maor-turning-point-in-kannur-train-burning-case-police

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் தீ வைக்கப்பட்ட சம்பவம்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.  தீயணைப்பு  வீரர்கள் வந்து போராடி தீயை அணைத்த போதும் ஒரு கம்பார்ட்மெண்ட் முழுவதும் சேதமடைந்தது.

இதே ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம்  பயணி ஒருவர் மீது பெட்ரோல் ஊத்தி எரிக்க முயன்ற சம்பவமும் நடந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவரை என்ஐஏ  அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதன் காரணமாக ரயில் பெட்டி எரிப்பு சம்பவங்களுக்கு பின்பும்  ஏதேனும் சதி இருக்குமா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வந்தது.

kannurtrainburn

ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் மேற்கு வங்கத்தைச் சார்ந்த  பிரஸூன் ஜித் ஸிக்தர்(40)  என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையின் விசாரணையில் அவர் கொல்கத்தாவில் சர்வராக வேலை செய்து வந்தார் என்றும் சில நாட்களுக்கு முன்பு தான் கேரளாவிற்கு வந்திருக்கிறார் என்ற தகவலும் தெரிய வந்திருக்கிறது.

ரயில் நிலைய பிளாட்பார்மில் அமர்ந்து  யாசகம் கேட்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால்  பாத்திரத்தில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் புகைப்பழக்கம் கொண்டவரான அவர்  தீப்பெட்டியை பயன்படுத்தி ரயிலுக்கு தீ வைத்ததாகவும் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டு உள்ளார். இதனை அவர் தனியாகவே செய்ததாகவும் அவருக்கு பின் யாரும் இல்லை என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.