#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாயையும், 16 வயது மகளையும் 18 பேர் சேர்ந்து தொடர் கற்பழிப்பு!. விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் செய்த கொடூரம்!.
அரியானா மாநிலம், கைதால் மாவட்டத்தில் உள்ள சர்பஞ் எனும் கிராமத்தை சேர்ந்தவர் லீலா. கணவனை இழந்த லீலாவிற்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர்கள் இருவரும் அங்கு கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் எதோ ஒரு வழக்கு விசாரணைக்காக அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு தாய், மகள் இருவரையும் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் விசாரணை என்ற பெயரில் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அடிக்கடி வரவழைத்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணை என்ற பெயரில் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அடிக்கடி வரவழைத்த போலீசார், தாய் மகள் இருவரையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
இதில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் உட்பட 7 பேர் மற்றும் 9 நபர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என சிறுமியின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.