மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாநில பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது.. வெத்து டப்பி கூட இல்லையாம்.!
பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான மிரட்டல் விடுத்தனர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு இருக்கிறது. இந்த வெடிகுண்டு சற்றுநேரத்தில் வெடித்து சிதறும் என மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்த மர்ம நபர் அழைப்பை துண்டித்து இருக்கிறார்.
இதனையடுத்து, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் சரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு விரைந்த அதிகாரிகள், அங்கிருந்தவர்களை அவசர கதியில் வெளியேற்றிவிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது, பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லாததால் நிம்மதிப்பெருமூச்சு விட்ட அதிகாரிகள், பொய்யான தகவலை தெரிவித்த நபர் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து, அரசு அதிகாரிகளுக்கு பொய்யான தகவல் தெரிவித்து அலைக்கழித்த சுராஜ் தார்ம் ஜாதவ் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.