சுதந்திர தினம் அன்று தேசிய கொடி ஏற்றி வீடு திரும்பிய ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் படுகொலை.! பெரும் பரபரப்பால் 144 தடையுத்தரவு.!



murder in thelungana

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த முக்கிய பிரமுகரான தமினேனி கிருஷ்ணய்யா கம்மம் மாவட்டத்தில், கம்மம் ஊரக மண்டல பகுதியில் தேசிய கொடி ஏற்றியுள்ளார்.

இதனையடுத்து தனது இருச்சக்கரவாகனத்தில் அவர் வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஆட்டோவில் வந்த 4 பேர் வழிமறித்து தமினேனி கிருஷ்ணய்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த படுகொலை சம்பவம் எதிரொலியாக தெலடாரூபள்ளி கிராமத்தில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட கிருஷ்ணய்யா சி.பி.எம். கட்சியில் இருந்து சில காலங்களுக்கு முன் விலகினார். பின்னர், ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிலையில், தேசிய கொடியேற்றி விட்டு திரும்பிய சில நிமிடங்களில் அவரை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.