தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு.! தமிழகத்தில் கடந்த ஆண்டை விட குறைவான விண்ணப்பம்.!
மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கி கடந்த மாதம் 10ஆம் தேதி முடிவு பெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்களின் விண்ணப்பகள் ஏற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் 198 நகரங்களில் இந்தாண்டு நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.
நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது. அதன்படி செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனவும், செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறயிருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கும் ஹால் டிக்கெட்டை nbe.edu.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.