மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுமாப்பிள்ளை உடலில் 100 வெட்டுக்காயங்கள்.. துள்ளத்துடிக்க நடந்த படுகொலை.. இரத்த வெள்ளத்தில் சடலம்.. பேரதிர்ச்சி சம்பவம்.!
ஹோலியன்று இருவருக்கு இடையே பிரச்சனை நடக்க, 2 நாட்களுக்கு முன் மாயமான புதுமாப்பிள்ளை உடலில் 100 காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.
பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமார்கி நகரில் வசித்து வரும் இளைஞர் சிந்து (வயது 20). இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிந்து தொடர்ந்து தேடப்பட்டு வந்துள்ளார். உறவினர்களும் அவரை தேடி அலைந்துள்ளனர். இந்த நிலையில், அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் சிந்து படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரின் முகம் மற்றும் உடலில் ஆழமான வெட்டுக்காயமும் இருந்துள்ளன. மொத்தமாக அவரின் உடலில் 100 வெட்டுக்காயங்கள் தென்பட்டுள்ளன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் சிந்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 8ம் தேதியின்போது நடந்த ஹோலி பண்டிகையில், சிந்துவிற்கும் - அப்பகுதியை சேர்ந்த மகேதா என்ற இளைஞருக்கும் இடையே தகராறு நடந்தது தெரியவந்தது. இதனால் மகேதாவிடம் விசாரணை நடந்து வருகிறது.