வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு கல்வித்தகுதி நீக்கம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் கிராம மக்கள்!



no need educational qualification for driving license


போக்குவரத்து வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தநிலையில் வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும் என சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அண்மையில் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தங்களது மாநிலத்தில் வாகனத்தை இயக்கும் திறன் பெற்றோர் போதிய கல்வித் தகுதி இல்லாததால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். ஓட்டுநர்களுக்கு அவர்களின் துறையில் திறன் தேவையே தவிர, கல்வித் தகுதி தேவையற்றது. எனவே ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்குமாறு ஹரியானா மாநில அரசு வலியுறுத்தியது. 

Driving license

மேலும் இதற்கான அ‌ரசாணை விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்குவதன் மூலம் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் துறையில் உள்ள 22 லட்சம் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உதவியாக இருக்கும் என போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.