சூரிய கிரகணத்தை முன்னிட்டு., 25ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு.. மாநில அரசு அதிரடி.!



Odisha Government Announce 25th Oct Public Holiday Solar eclipse

 

தீபஒளி பண்டிகைக்கு அடுத்த நாளில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பகுதிகளில் கண்டுகளிக்கலாம் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்தியாவின் அந்தமான் நிகோபார், வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலாது. சூரிய அஸ்தமனத்திற்குள் சூரிய கிரகணம் நிறைவடைந்துவிடும். இது சிறிது நேரம் தென்படும் என்றாலும், அதனை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. 

Solar eclipse

இந்த நிலையில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா மாநில அரசு அக். 25ம் தேதியில் பொதுவிடுமுறை அறிவித்து இருக்கிறது. அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.