மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Pan கார்டுடன் ஆதார் நம்பரை இணைத்துவிட்டீர்களா?.. மத்திய நேரடி வரிகள் வாரியம் உச்சகட்ட எச்சரிக்கை.!
பானுடன் ஆதாரை இணைக்க இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பான் கார்ட் வைத்துள்ள நபர்கள், அதனுடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த இணைப்புக்கான காலக்கெடு என்பது ஆண்டுகள் தாண்டி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஆதார் நம்பருடன் பானை பலரும் இணைக்காத காரணத்தால், தற்போது ரூ.1000 அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து. இந்த காலக்கெடு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நிறைவடைகிறது.
இதற்கிடையே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பான் கார்டு வைத்துள்ளவர்கள் ஆதார் நம்பருடன் பானை இணைக்காத பட்சத்தில், ஏப்ரல் 1ம் தேதி முதல் அவை செயல்படாது. அதனை திரும்ப பெறவும் இயலாது. வருமான வரித்துறையிடம் நிலுகையில் இருக்கும் பணத்தை பெறவும் முடியாது, அதற்கான கோரிக்கையை முன்வைக்கவும் முடியாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.