மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முடிந்தது காலக்கெடு.. இன்று முதல் பான்கார்டு செல்லாது; வங்கிகணக்கும் முடக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு..!!
தனிமனிதனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் எண்ணும், வங்கி பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வழங்கப்பட்ட பான்கார்டு எண்ணும் இணைக்க மத்திய அரசால் பல்வேறுமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூன் 30-ம் தேதியான நேற்றுடன் ரூ.1000 செலுத்தி இணைக்க விடுக்கப்பட்ட காலக்கெடுவானது நிறைவு பெற்ற நிலையில், ஜூலை 1-ஆம் தேதியான இன்று முதல் ஆதாருடன் இணைக்காத பட்சத்தில் அந்த பான் கார்டு செயலற்றதாகிவிடும்.
வங்கிகணக்கு எண் - பான்கார்டு இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.