மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: இந்தி சூப்பர்ஸ்டார்க்கு சம்மன்?.. ஆப்பு மேல் ஆப்பு?..!
வெளிநாட்டில் சட்டவிரோத பண முதலீடு மற்றும் சொத்துவாங்கிய விவகாரத்தில், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அமிதாப் பச்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பனாமா நாட்டில் செயல்பட்டு வரும் மொஸாக் பொன்சேகா சட்ட நிறுவனம், வெளிநாட்டில் உள்ள பல நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்துள்ளவர்கள், சொத்துக்களை வாங்கியோரின் ஆவணத்தை வைத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கடந்த 2016 ஆம் வருடம் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் ஆவணம் குறித்து புலனாய்வு நடத்தி பல பரபரப்பு தகவலை வெளியிட்டது.
இந்த பத்திரிக்கையாளர் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட தகவலுக்கு பின்னர், "பனாமா பேப்பர்ஸ்" என்ற பெயரால் அது அழைக்கப்பட்டு வருகிறது. பத்திரிக்கை ஆய்வின் முடிவில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்று பல்வேறு நபர்களின் பெயர்கள் சட்டவிரோத பண முதலீடு மற்றும் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான பெயரில் இடம்பெற்றன.
இவ்வழக்கு விசாரணை தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியிருந்த நிலையில், கடந்த சில வாரத்திற்கு முன்னதாக அபிஷேக் பச்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம் அபிஷேக் பச்சனின் மனைவி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறையினர் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அமிதாப் பச்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.