மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரதமர் மோடி பேரணியில் குண்டுவெடிப்பு... குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்.!!
2013 ஆம் வருடம் பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பேரணியில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாட்னா தொடர் குண்டுவெடிப்பு
2014 ஆம் வருட பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை சீர்குலைக்கும் விதமாக அக்டோபர் 27, 2013 ஆம் வருடம் பாட்னா நகரின் காந்தி மைதான் மற்றும் ஸ்டேஷன் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 83 பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
மரண தண்டனை விதிப்பு
தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹைதர் அலி, முஜிபுல்லா, நோமண் மற்றும் இம்தியாஸ் ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அசாருதீன் மற்றும் உமர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் தங்களது தண்டனையை அனுபவித்து வந்தனர். மேலும் இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இதையும் படிங்க: 3 நாட்கள் அரசுமுறைப்பயணம்; போலந்து, உக்ரைன் நாட்டுக்கு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.!
ரத்து செய்யப்பட்ட மரண தண்டனை
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளின் கருணை மனு மற்றும் மேல்முறையீட்டு மனு பாட்னா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஹைதர் அலி, நோமன், இம்தியாஸ் மற்றும் முஜீபுல்லா ஆகியோரின் தண்டனையை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும் இவர்களுக்கு மரண தண்டனைக்கு பதிலாக 30 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர். மேலும் அசாருதீன் மற்றும் உமர் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக பதிவு செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். குற்றவாளிகள் அனைவரும் இளம் வயதினராக இருப்பதாலும் அவர்களுக்கு வெளி உலக தொடர்பு இல்லாததால் மரண தண்டனை குறைக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முற்றிப்போன ரீல்ஸ் மோகம்; இளம் தம்பதி, 3 வயது குழந்தை உடல் சிதறி பலி.!