3 நாட்கள் அரசுமுறைப்பயணம்; போலந்து, உக்ரைன் நாட்டுக்கு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.!



PM Modi Take off from Delhi on Poland Ukraine Visit 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 3 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலில் போலந்து செல்லும் பிரதமர், அங்கு அந்நாட்டு பிரதமர் டஸ்கின் முன்னிலையில் நடைபெறும் 2+2 விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளார். 

போலந்து பயணம்

அதேபோல, இந்தியா - போலந்து நாடுகளுக்கு இடையேயான கலாச்சாரம், தொழில் முதலீடுகள், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் ஒப்பந்தங்களும் பரிமாறப்படவுள்ளன. பின் போலந்து நாட்டில் இருந்து அமெரிக்கா - பிரான்ஸ் நாட்டின் அதிபர்கள் பயணித்த இரயிலில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். 

இதையும் படிங்க: பெண் தோழியின் தங்கை மீது ஆசை; கூடாநட்பால் தூக்கில் தொங்கி உயிரைவிட்ட இளம்பெண்.!

உக்ரைன் பயணம்

சுமார் 20 மணிநேர தொடர் பயணத்திற்கு பின்னர் உக்ரைன் நாட்டின் தலைநகர் கியூவை சென்றடையும் பிரதமர், அங்கு உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கிறார். அதனைத்தொடர்ந்து, அங்கு இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பாம்பை பற்களால் கடித்து மென்ற சிறுவன்; விளையாட்டு பொருள் என நினைத்து பகீர் காரியம்.!