மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கரம்... 60 வயது மூதாட்டி பலாத்காரம்.!! 25 வயது இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.!!
உபி மாநிலத்தில் 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
60 வயது மூதாட்டி பலாத்காரம்
உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 60 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பதே கான் என்ற 25 வயது இளைஞர் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தின் போது மூதாட்டி அலறி துடித்ததையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
காவல்துறையில் புகார்
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று மூதாட்டியை மீட்டுள்ளனர். மேலும் அவர்களின் உதவியுடன் சம்பவம் குறித்து காவல்துறையில் மூதாட்டி புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த பதே கான் என்ற இளைஞரை காவல்துறை தேடி வந்தது.
இதையும் படிங்க: உபியில் கொடூரம்... 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கற்பழிப்பு.!! குற்றவாளி கைது.!!
என்கவுண்டரில் கைது
இந்நிலையில் அந்த நபர் பதுங்கி இருக்கும் இடம் குறித்த தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக காவல்துறை சென்றது. அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளியை காலில் சுட்டு காவல்துறை கைது செய்தது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் கொடூரம்... 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! ஆசிரியர் கைது.!!