போஸ்ட் ஆபீஸில் சூப்பரான சிறு சேமிப்பு திட்டங்கள்; ஜனவரி 1 முதல் கூடுதல் வட்டி..!



post-office-extra-interest

 

இந்திய தபால்துறை (போஸ்ட் ஆபீஸ்) பல சிறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இது ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட தபால் துறையில் அதிக வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் மக்கள் தபால் துறையில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்வதற்காக அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தபால் துறையில் ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி வட்டி விகிதங்கள் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் சேமிப்புதாரர்கள் தங்களது சேமிப்புடன் கூடுதல் வட்டியையும் சேர்த்து பாலிசி முதிர்வு பெறும் பட்சத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படும். தபால் துறையில் சிறு சேமிப்பு திட்டங்கள் பல வகைகளில் நடைமுறைக்கு உள்ளன. 

அவை கிராம சுரக்ஷா யோஜனா, செல்வமகள் சேமிப்பு திட்டம், காப்பீட்டு திட்டம் போன்று மக்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது. இதனால் மக்கள் அதிகம் இதில் விரும்பி தங்களது பணத்தை செலுத்துகின்றனர். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதியில், சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அறிவிக்கும். 

போஸ்ட் ஆபீஸ்

அதேபோல் இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 2023 ஜனவரி 1 முதல் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 6.8 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான டெர்ம் டெபாசிட் திட்டத்தில் 1.1% உயர்த்தப்படுகிறது என்றும், மாத வருமான திட்டத்தில் 6.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக கூடுதல் வட்டி உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.