மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி பாடகப் புத்தகத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் வரலாறு மற்றும் சாதனைகள்.! கர்நாடக முதல்வர் அறிவிப்பு.!
மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் படைத்த சாதனைகள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் புனீத் ராஜ்குமார். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி தனது 45 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இவரது திடீர் மரணம் அனைவர் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனித் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அண்மையில் இவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நடிகர் புனித் ராஜ்குமார் ஏராளமான சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார். இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் வகையில் கர்நாடகா ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
கர்நாடகா, கன்னட மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் அவர் குறித்து மக்கள் மனதில் இருக்கும் கௌரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படுகிறது. புனித் பல மனிதாபிமானப் பணிகளை செய்துள்ளார். தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் தங்களது கண்களை தானம் செய்ய முன்வந்தனர். எங்களால் முடிந்தவரை அவர் குறித்த செய்திகளை முன்னெடுத்து செல்வோம் என கூறியுள்ளார்.