மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயிற்றுக்குள் 61 நாணயங்கள்.. "அதற்காக" இப்படியெல்லாமா செய்வாங்க?.. கதறலில் அதிர்ந்துபோன மருத்துவர்கள்..!
வயிற்று வலியால் மருத்துவமனைக்கு வந்த இளைஞரின் வயிற்றில இருந்து சுமார் 61 ரூ.1 நாணயங்கள் அறுவை சிகிச்சை முறையில் அகற்றப்பட்டது.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரை சேர்ந்த இளைஞர், கடந்த 27 ஆம் தேதி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரிடம் கேட்ட சமயத்தில் 15 ரூ.1 நாணயங்களை விழுங்கியதாக தெரிவித்துள்ளார்.
அவரை நம்பாத அதிகாரிகள் வயிற்றை ஸ்கேன் செய்தபோது அதிகளவிலான நாணயங்கள் தென்பட்டுள்ளன. இதனையடுத்து, எண்டோஸ்கோபிக் உதவியுடன் 2 நாட்களாக அறுவை சிகிச்சை செய்து 61 நாணயங்கள் எடுக்கப்பட்டன.
இந்த விஷயம் குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், மன உளைச்சல் காரணமாக நாணயங்களை விழுங்கியதாக தெரிவித்து மருத்துவர்களை அதிரவைத்துள்ளார். மேலும், இளைஞர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.