குடியுரிமை சட்டதிருத்தத்தில், இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாதது ஏன்? ராஜ்நாத் சிங் விளக்கம்!



Rajnath sing talk about CaB

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து உள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில், 'முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை சட்டம் இயற்றப்படவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சமடையும் இந்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கவே இந்த சட்டமானது கொண்டுவரப்பட்டது.

Rajnath sing

அந்நாட்டு முஸ்லிம்கள் சேர்க்கப்படாததற்கு காரணம் மேற்கூறிய மூன்று நாடுகளுமே முஸ்லீம் நாடுகள் ஆகும். இஸ்லாமை பின்பற்றும் அந்த நாடுகளில் முஸ்லிம்கள் மத ரீதியான பாதிப்புக்கு ஆளாக மாட்டார்கள். எனவே, தான் இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. 

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எனது சகோதரர்களாகவும், குடும்ப உறுப்பினராகவும்தான் கருதுகிறோம். தற்போது அசாம், மேற்கு வங்கத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் உள்ள அனைத்து குழப்பங்களும் தீர்க்கப்படும். குடியுரிமை சட்டத் திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று யாராவது நிரூபித்தால் அதனை நாங்கள் பரிசீலிக்க தயார் என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.