ரத்தன் டாடாவை பிரிய மறுத்த வளர்ப்பு நாய்; இறுதிச்சடங்கில் நெகிழ்ச்சி நிகழ்வு.!



ratan-tata-dog

 

இந்தியாவில் மிகப்பெரிய தனியார் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவிய ரத்தன் டாடா, நேற்று இரவில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். தொழில்துறைகள், முதலீடுகளை தாண்டி மனிதநேயம் மிக்க மனிதராக அறியப்பட்டவரின் மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக டாடா குழுமத்தின் வளர்ச்சிக்காக உறுதுணையாக இருந்தவர், 2012ம் ஆண்டு இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகி மேற்பார்வை மட்டும் செய்து வந்தார். உப்பு முதல் கார், விமானம் வரை என பல தொழில்களை டாடா நிறுவனம் செய்து வருகிறது. 

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.!! தெலுங்கு தேச கட்சி பிரமுகர் வெறி செயல்.!!

ஒவ்வொரு இந்தியரும் கார்களை வாங்கி மகிழவேண்டும், அது குறைந்த விலையில் இருக்க வேண்டும் என எண்ணிய டாடா நேனோ காரையும் அறிமுகம் செய்திருந்தார். தனக்கு வருவாயாக கிடைக்கும் சொத்துக்களை பெருமளவு தனது அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு உதவி செய்ய வழங்கி இருக்கிறார். 

டாடா அறக்கட்டளை பெயரில் 16 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளது. ரத்தன் டாடாவின் பெயரில் 3500 கோடி சொத்துக்கள் உள்ளது. தனது தேவை போக மீதமுள்ளதை அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நலத்திட்டபணிகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மும்பையில் செல்லப்பிராணியாக நாய்கள் உட்பட விலங்குகளுக்கு பிரத்தியேக சிகிச்சை மையமும் ரூ.160 கோடி செலவில் அமைத்து வழங்கி இருந்தார். இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவைத் தொடர்ந்து, இறுதிச்சடங்கின்போது அவரின் நாய் டாடாவை பிரிய மறுத்து சோகமாக காணப்பட்டது. 

இதையும் படிங்க: " என்கிட்டயே டைவர்ஸ் கேப்பியா.." விவாகரத்து கேட்ட மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.!!