மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆற்றில் வீசிச் சென்ற உறவினர்கள்.! பதபதைக்க வைக்கும் வீடியோ.!
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். இந்தநிலையில், உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் பிபிஇ உடை அணிந்த ஒருவர் உள்பட இரண்டு நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மழை பெய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், பாலத்தின் வழியே வாகனத்தில் சென்றவர்களால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து ஆற்றில் தூக்கி வீசப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டு, உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் நாத் மிஸ்ரா சடலம் என தெரியவந்துள்ளது.
#India | A man in a PPE suit was caught on camera throwing a body into Rapti river in #UttarPradesh.
— Munir A Hussein (@Munir566) May 30, 2021
The body was of a Covid positive patient who lost his life on May 28. pic.twitter.com/P49GzBZv5j
அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் மே 28-ம் தேதி உயிரிழந்து, கொரோனா வழிமுறைகளுக்குள்பட்டு அவரது உடல் குடும்ப உறுப்பினர்களிடமே ஒப்படைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.