ஈவிரக்கமில்லாமல்... பிறந்த குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டிய அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன.?



renowned-hospital-nurse-stick-a-infant-mouth-with-plast-SZG3XG

மும்பையில் இயங்கி வரும் பிரபல மருத்துவமனை ஒன்றில் அழுது கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் வாயில் டேப் போட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக  பணியில் இருந்த நர்ஸ் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் சாவித்திரிபாய் பூலே என்ற  பிரபலமான மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மும்பையைச் சார்ந்த பிரியா காம்ப்லே என்ற 23 வயது பெண்ணுக்கு கடந்த மே 25ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே மஞ்சள் காமாலை இருந்ததால் என்ஐசியு வில் வைத்து  மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தனர்.

India

இந்நிலையில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சென்று குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பிரியாவை அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து  கடந்த  ஜூன் இரண்டாம் தேதி  தனது குழந்தைக்கு பால் குடுப்பதற்காக சென்று இருக்கிறார் பிரியா. அப்போது பணியில் இருந்த சவிதா என்ற நர்ஸ் இப்போது வேண்டாம் மறுநாள் காலை 8 மணிக்கு வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சில் சந்தேகமடைந்த பிரியா உள்ளே சென்று பார்த்த போது குழந்தையின் வாயில்  பிளாஸ்டர் ஒட்டி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் முன்னாள் கவுன்சிலரை தொடர்பு கொண்ட பிரியா தன்னை உடனடியாக இங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒட்டிய நர்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது முழுமையாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம்  வாக்குறுதி கொடுத்துள்ளது.