மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலப்பு திருமணம் செய்தால் ரூ.10 லட்சம் நிதியுதவி.. அரசு அதிரடி..!!
இந்தியா முழுவதும் சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகளால் பல்வேறு பிரச்சனைகள் நடந்துவருகிறது. இந்த சமூக ஏற்றத்தாழ்வை ஜாதிரீதியாக ஒழிப்பதற்கு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்தால் ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தன. தற்போது இந்ததொகை மேலும் ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டு அது 10 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 பட்ஜெட்டில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தம்பதியின் கூட்டு வங்கிகணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தப்படும் என்றும், மீதமுள்ள ரூ.5 லட்சம் 8 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத்தொகையாக டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.