கௌரவ கொலை வழக்கு... தந்தை, தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை.!! இளம் பெண்ணுக்கு கிடைத்த நீதி.!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டையே உலுக்கிய கௌரவக் கொலை தொடர்பான தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காதல் திருமணம்
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் ஹரிதா. இந்நிலையில் ஹரிதா பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அனீஸ் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டிலிருந்து வெளியேறிய ஹரிதா, அனீசை திருமணம் செய்து கொண்டார். இது அவரது பெற்றோருக்கு கடும் ஆத்திரத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது.
கௌரவ கொலை
இதனைத் தொடர்ந்து ஹரிதா மற்றும் அவரது கணவர் வாழும் வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த ஹரிதாவின் தந்தை சுரேஷ் மற்றும் தாய் மாமா பிரபு ஆகியோர் அனீசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த கௌரவக் கொலை வழக்கில் சுரேஷ் முதல் குற்றவாளியாகவும் பிரபு இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.
இதையும் படிங்க: "வா நாம கல்யாணம் கட்டிக்கலாம்.." சிறுமியை கடத்திய வட மாநில தொழிலாளி.!! செக் வைத்த போலீஸ்.!!
ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பின் படி ஹரிதாவின் கணவரை கொலை செய்த அவரது தந்தை சுரேஷ் மற்றும் தாய் மாமா பிரபு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் இருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையை வசூல் செய்து ஹரிதாவிடம் கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: "அண்ணியை தொந்தரவு செஞ்சா அவ்வளவுதான்.." கண்ணை மறைத்த காமம்.!! நண்பன் படுகொலை.!!