மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வா நாம கல்யாணம் கட்டிக்கலாம்.." சிறுமியை கடத்திய வட மாநில தொழிலாளி.!! செக் வைத்த போலீஸ்.!!
கேரள மாநிலத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்ற மேற்கு வங்க தொழிலாளி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மேற்கு வங்க வாலிபரை கைது செய்துள்ள கேரளா போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள்
கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற பகுதிகளில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். இதேபோன்று மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சபூஜின் என்ற வாலிபர் கேரள மாநிலத்தின் அங்கமாலி பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றும் தங்கி இருந்திருக்கிறது.
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமி கடத்தல்
இந்நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியிருக்கிறார் சபூஜின். மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மேற்குவங்க மாநிலத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என பதறிய பெற்றோர் இது தொடர்பாக கேரள போலீசாரிடம் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையை விரைவாக மேற்கொள்ளும்படி எர்ணாகுளம் மாவட்ட சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "அண்ணியை தொந்தரவு செஞ்சா அவ்வளவுதான்.." கண்ணை மறைத்த காமம்.!! நண்பன் படுகொலை.!!
தட்டி தூக்கிய தனிப்படை
அவரது உத்தரவின் பேரில் மேற்கு வங்க தொழிலாளியின் செல் போன் நம்பரை ட்ராக் செய்ததில் அவர் மேற்கு வங்க மாநிலம் ஜாலங்கி என்ற பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த கேரள தனி படை போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு கேரளா அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சபூஜின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: கோயில் அருகே பயங்கரம்.. கணவன் கண் முன்னே.. புதுப்பெண் கூட்டு பலாத்காரம்.!! 7 பேர் அதிரடி கைது.!!