மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை கொன்று வீட்டில் புதைத்த கணவன்.. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கிய போலீஸ்..!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருபவர்கள் சஜீம் - ரம்யா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் சஜிவ் தனது மனைவி ரம்யா திடீரென காணாமல் போய்விட்டதாக கடந்த 2022 ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தனது மனைவி ரம்யாவிற்கும் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாகவும் ரம்யா அவரோடு தான் ஓடிவிட்டதாகவும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை சஜீவ் நம்ப வைத்துள்ளார். இதனையடுத்து போலீசார் ரம்யாவை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் இந்த வழக்கில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில் சஜிவின் நடவடிக்கையின் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே போலீசார் அவரை விசாரித்தனர். விசாரணையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் தனது மனைவி ரம்யாவை கொன்று வீட்டிலேயே புதைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சஜீவின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் புதைக்கப்பட்ட ரம்யாவின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் சஜிவை கைது செய்த போலீசார் கொலைகான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.